காணாமல் போனவர்கள்
குமரி எஸ். நீலகண்டன்
மரத்தில்
தன்னந்தனியாய்
அழகான
ஒரு பறவையைப்
பார்த்தேன்.
முகமலர அதோடு
ரகசியமாய்
பேசிக் கொண்டிருந்த
நிலவையும் பார்த்தேன்.
எதிர்பாராமல்
ஒரு மின்னல்
கிழித்த துணியாய்
மேகத்தை கிழிக்க...
பேரிடி முழங்கியது.
பெருமழை பெய்தது.
பேசிக் கொண்டிருந்த
பறவையையும்
காணவில்லை.
நிலவையும்
காணவில்லை.
எங்கே போனதோ
அவைகள்.
9 comments:
//எதிர்பாராமல்
ஒரு மின்னல்
கிழித்த துணியாய்
மேகத்தை கிழிக்க...
//
ரசித்தேன். வாழ்த்துக்கள்
சக்தி பிரபா அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
அருமை.
மிக்க நன்றி ஸ்ரீராம்...
அருமை. நிச்சயம் கிடைப்பார்கள்.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
வலையோசை-அதீதம்
நல்வாழ்த்துக்கள்!
Post a Comment