நீலகண்டனின் எழுத்துக்கள்
Friday, May 27, 2011
வருடச் சங்கடம் - வல்லமை இதழில் வெளியான கவிதை
வருடச் சங்கடம்
குமரி எஸ். நீலகண்டன்
அப்பா அம்மாவோடுதான்
அவனது ஒவ்வொரு
பிறந்த நாளும்.
கேக் வெட்டி
மெழுகுத் திரிகள் ஒளிர
வருடம் தவறாமல்
கொண்டாடி வருகிறான்.
வருடந்தோறும்
மெழுகுத் திரிகளோடு
அவன் வயதும்
பெருகப் பெருக அவனது
அப்பாவும் அம்மாவும்
அதே இளமையில்
புகைப்படத்தில்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)