Wednesday, June 22, 2011

பசுவும் நிலாவும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

பசுவும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்

                                                    
பௌர்ணமி இரவின்
பரந்த வெளியில்
கொட்டகைத் தொட்டியில்
கொட்டிய கழனியை
சப்பி சப்பி
குடித்தது பசு.

நிலா மிதந்த
கழனியை மென்று
மென்று சுவைத்தது.
மிகுந்த சுவையாய்
இருந்ததாய் சிலாகித்தது.

மெல்ல மெல்ல
வாய்க்கு பிடிபடாமல்
தொட்டியில் எஞ்சிய
கழனியிலேயே கொஞ்சி
விளையாடியது நிலா.

கன்று வாய் வைத்ததும்
காணாமல் நிலா போக
பசு கன்றைப்
பார்த்தது சந்தேகமாக...