Thursday, November 21, 2013

கோவையில் குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட் 15 நூல் அறிமுக நிகழ்வு

கோவை இலக்கிய சந்திப்பு

குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட்15-நாவல் அறிமுக கூட்டம்நாள் - நவம்பர் 24 ஆம் தேதி காலை 10 மணி

இடம் - நரசிம்ம நாயுடு உயர்நிலைப் பள்ளி, மரக்கடை சந்திப்பு, கோவை

பங்கு பெறுவோர்

கோவை ஞானி,
சுப்ரபாரதி மணியன்,
நித்திலன்,
சக்தி செல்வி,
ஸ்டாலின்,
இளஞ்சேரன்,
க.வை.பழனிசாமி,
பழமன்,
சி.ஆர்.ரவீந்திரன்,

சு.வேணுகோபால்

Thursday, July 4, 2013

ஆகஸ்ட் 15 புதினத்தின் அறிமுக நிகழ்வு ஜூலை 7 ஆம் தேதி சென்னையில்

படி அமைப்பு சார்பில் ஆகஸ்ட் 15 புதினத்தின் அறிமுக நிகழ்வு ஜூலை 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குசென்னையில் டிஸ்கவரி புக் பேலஸில் நடக்க இருக்கிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Saturday, June 22, 2013

ஆகஸ்ட்-15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது விழாப் படங்கள்

பதிப்புச் செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளை விருது விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. மெய்யப்பன் அறக்கட்டளைத் தலைவர் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், சிலம்பொலி செல்லப்பனார், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் அவ்வை நடராசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.பா. அறவாணன், எழுத்தாளர் ராசேந்திர சோழன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், தமிழறிஞர் பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன், கவிஞர் பொன் செல்லமுத்து, கவிஞர் பல்லடம் மாணிக்கம், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், எழுத்தாளர், பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், பால சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் கமலவேலன் உட்பட பல அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டனர். விழாப் படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்,Thursday, June 20, 2013

ஆகஸ்ட் 15 நூலுக்கு மெய்யப்பன் அறக்கட்டளை விருது....

 மணி வாசகர் பதிப்பகத்தின் சார்பில் பதிப்பகச் செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளையின் 2012 ஆம் ஆண்டின் சிறந்த நூலாக எனது ஆகஸ்ட்15 நூல் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருது நாளை வழங்கப்பட இருக்கிறது. விழா அழைப்பிதழை இத்தோடு இணைத்துள்ளேன்... விழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

மிக்க அன்புடன்
குமரி எஸ்.நீலகண்டன்

Tuesday, April 16, 2013

சாலை விதி - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை


சாலை விதி
குமரி எஸ். நீலகண்டன்


ஏழு வயதுக் குழந்தை
ஸ்கூட்டர் ஓட்டும்
பாவனையில்
பிர்பிர் என்று
ஒலி எழுப்பிக் கொண்டே
ஓடிக் கொண்டிருந்தது.

வலது கையைச்
சுழற்றிச் சுழற்றி
வாகனத்தின் வேகத்தை
வாயால் கூட்டிற்று
குழந்தை.

இடது கை மட்டும்
காதினில் குவிந்திருக்க
சாலையில்
வாகனச்சப்தம்
காதை அடைக்கிறதா
என்றேன்.

உடனே குழந்தை
தொல்லைக்
கொடுக்காதே நான்
செல்ஃபோனில் பேசிக்
கொண்டேச்
செல்கிறேன் என்றது.

Thursday, January 3, 2013

" ஆகஸ்ட் 15 " நூலுக்கு பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதி.....

" ஆகஸ்ட் 15 " நூலுக்கு பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதி.....

ஆகஸ்ட் 15
இந்த நாள் ஒரு தலைமுறைக்கு இந்தியருக்கு விசேஷமாக இருந்தது. இலட்சியம், நாணயம், உண்மை ஆகியவற்றுக்கு நினைவூட்டலாக இருந்தது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் ருஷ்டி அவருடைய ‘’நடுநிசிக் குழந்தைகள்’’ எழுதிய போதே இந்தத் தேதி வரலாற்றுக்குள் புகுந்த இன்னொரு நாளாகப் போய் விட்டது.
நண்பர் நீலகண்டன் மேற்சொன்னது உண்மையல்ல என்று நிரூபிப்பது போல ஒரு அபூர்வமான இலக்கியப் படைப்பை உருவாக்கியிருக்கிறார். நிஜம், புனைக் கதை இரண்டும் பின்னிப் பின்னி வந்து இது இறுதியில் ஓர் நம்பிக்கையூட்டும் செய்தியை நமக்குத் தருகிறது. இதில் வரும் ஒரு பாத்திரத்தின் அசலை நான் நன்கு அறிவேன். இந்த நூல் நமது நாடு, நமது ஆரம்ப கால இலட்சியப் போக்கு, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் நமது பாரம்பரியம் ஆகிய மூன்றுக்கும் அஞ்சலி செலுத்துவதாக இருக்கிறது.

Tuesday, January 1, 2013

மீண்டும் வலைப்பூவில் ஆகஸ்ட் - 15 என்ற புதினக் குழந்தையோடு

இணைய தள நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்... சுமார் ஒன்பது மாத இடைவெளிக்கு பின் மீண்டும் இடுகைகளுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அந்த ஒன்பது மாத இடைவெளியானது ஆகஸ்ட் 15 என்ற எனது புதினக் குழந்தையை பெறுவதற்கான பிரசவ விடுப்பு... 502 பக்கங்களுடன் அந்த நாவல் நூல் வடிவில் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது....
இனி இந்த நூல் குறித்து....
ஆகஸ்ட் 15

இந்த நாளில் பிறந்த சத்யா (2000), கல்யாணம்(1922), பாரதமாதா(1947) ஆகியோரின் வாழ்க்கையின் பின்னணியில் உருவான புதினம் இது. இதுவரை எழுதப்படாத ஒரு புதிய உத்தியில் எழுதப்பட்ட நாவல் இது. 

 கல்யாணம்.
 காந்தியின் செயலாளர்.

காந்தி இறப்பதற்கு முந்தைய நான்கு வருடங்களில் அவரது தனிச் செயலராக இருந்தவர் கல்யாணம் . காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது காந்தியின் வெகு அருகில் சில அங்குல தூரத்தில் நின்றவர். காந்தி இறந்தபின் கல்யாணம் பஞ்சாபில் இயங்கிய கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள மீட்புக் குழுவில் லேடி மவுன்ட் பேட்டனோடு பணியாற்றினார். புதுடெல்லியில் லேடி எட்வினா மவுன்ட் பேட்டனோடு சேர்ந்து அகதிகள் நிவாரணப்பணியிலும் அவர்களின் மறுவாழ்விற்காக ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைந்த பணியிலும் ஈடுபட்டார். அதன்பின் ரிஷிகேஷில் மீராபென் நடத்திவந்த பசுலோக் ஆஸ்ரமத்தில் ஒரு வருடம் பணியாற்றினார்....

கதையின் தொடர்ச்சி ....   ஆகஸ்ட் 15 நூலில்.......

புத்தகங்களை கீழ்கண்ட முகவரிகளில் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் பெறலாம்.


Discovery Book Palace (P)Ltd
No.6, Magavir Comlex, 1st Floor
Munusamy Salai, K K Nagar West
Chennai - 600078
Tamil Nadu, India. 
(Near Pondichery Guest house)

Ph"+91 44 65157525 , Cell +91 9940446650


Mail: discoverybookpalace@gmail.com

http://discoverybookpalace.com/brands.php?brand=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D

New Book Lands
52-C, North Usman Road,
T'Nagar, Chennai - 600017,
Tamilnadu, INDIA.
Phone: 91-044-28158171 / 28156006
Fax : 91-044-42123839
Email : orders@newbooklands.com / enquiry@newbooklands.com