நீலகண்டனின் எழுத்துக்கள்
Monday, October 10, 2011
குழந்தையின் நிலாப் பயணம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை
குழந்தையின் நிலாப் பயணம்
குமரி எஸ். நீலகண்டன்
பிறையின்
வளைவினில்
வசதியாய்
ஒரு குழந்தை
உட்கார்ந்து கொண்டது.
நிலாவும் குதூகலமாய்
குழந்தையை
உலகம் முழுவதும்
சுற்றிக் காட்டிக்
கொண்டிருந்தது.
அதற்குள்
அம்மா பள்ளிக்கு
நேரமாகிறதென
குழந்தையை அடித்து
எழுப்பி பலவந்தமாய்
இழுத்துப் போனாள்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)