| சில எதிர்பார்ப்புகள் | ||||
| ||||
![]() எதிர்பாராமல் இருக்கலாம். எதிர்வரவின் கொடுந்தீயில் பார்வைகள் பொசுங்காமல்... எதிர்பாராமல் இருக்கலாம். எதிர் வரவு அதி வலிமையுடன் ஆயுத பலத்துடன் உள உறுதியுடனும் இருக்கலாம். எதிர்பாராமல் இருக்கலாம். அகத்துள் ஒரு யுத்தமும் ஆயுதப் பிரளயமும் தவிர்க்கலாம். எதிர்பாராமல் இருக்கலாம். எதிர் வரவில் பூக்களின் வாசத்துடன் பட்டாம் பூச்சிகளின் படபடப்பில் அதன் இறகுகளின் பூக்கள் இருபுறமும் விரிய காற்றின் வாத்தியத்துடன் கவிதைகள் பூக்கலாம். எதிர்பாராமல் இருக்கலாம். எதிர் வரவிலேயே செலவும் செய்யலாம். எதிர்பாராமல் இருக்கலாம். எதிர் வரவு எதிரியின் வருகையாய் இடம் கொடாமல்..... எதிர்பாராமல் இருக்கலாம். கண்களை மூடி கதவுகளில் ஒளிந்து கவலைகளில் கரையாமல். எதிர்பாராமல் இருக்கலாம். எதிர்வரவே வாழ்க்கையின் வரைபடமாதலால்.... உயிரின் உறைவிடமாதலால் வருபவை வரட்டுமென்று வாசலைத் திறந்து வைத்து | ||||
Thursday, October 28, 2010
சில எதிர்பார்ப்புகள் - உயிர்மை உயிரோசையில் வெளியானக் கவிதை
Labels:
கவிதை
Subscribe to:
Comments (Atom)
