Wednesday, May 11, 2011

வனவாசம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

வனவாசம்
குமரி எஸ். நீலகண்டன்

பசுமையற்ற
காங்கிரீட் காடுகளினிடையே
விலங்குகள் விலக்கிய
வீச்சம் நிறைந்த
வீதி நதிகளின்
விஷ வாசத்தினூடே
நான்கு சக்கர கால்களுடன்
காட்டுக் கத்தலில்
நகர்ந்து செல்கிற
சிங்கங்கள், புலிகள்,
காட்டு யானைகள்,
கரடிகள், பன்றிகள்,
குள்ள நரிகள்,
விஷப் பூச்சிகள்,
கண்ணாடி முட்கள்,
காட்டு ராஜாக்களின் மிரட்டல்
இவற்றினிடையே பலஹீனமான
ஒரு காட்டு வாசியின்
அச்சத்துடன்
கடந்து செல்கிறேன்
காடுகளை
வேட்டைக் கருவிகள் ஏதுமின்றி
வெறும் நம்பிக்கைகளுடன்.