குழந்தையின் நிலாப் பயணம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை
குழந்தையின் நிலாப் பயணம்
குமரி எஸ். நீலகண்டன்
பிறையின்
வளைவினில்
வசதியாய்
ஒரு குழந்தை
உட்கார்ந்து கொண்டது.
நிலாவும் குதூகலமாய்
குழந்தையை
உலகம் முழுவதும்
சுற்றிக் காட்டிக்
கொண்டிருந்தது.
அதற்குள்
அம்மா பள்ளிக்கு
நேரமாகிறதென
குழந்தையை அடித்து
எழுப்பி பலவந்தமாய்
இழுத்துப் போனாள்.
8 comments:
பாவம் குழந்தை. காத்திருக்கும் நிச்சயமாக நிலா, மறுநாள் இரவு இதே போல குழந்தையை மகிழ்விக்க.
அழகான கவிதை.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி...
அருமையான கனவு.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html
மிக்க நன்றி ரத்னவேல் ஐயா அவர்களுக்கு
கனவெல்லாம் நிலாவா....நிலாவே கனவாப் போச்சா...!
சில காலமாய நான் நிலவிலேயேப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிலமிறங்கவில்லை... உங்கள் அன்பிற்கும் வருகைக்கும் நன்றி ஸ்ரீராம்.
Simply Super
மிக்க நன்றி prem உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..
Post a Comment