Friday, September 30, 2011

வானத்தில் இரண்டு நிலாக்கள் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

வானத்தில் இரண்டு நிலாக்கள்
குமரி எஸ். நீலகண்டன்

கணினித் திரையில்
அடோப் ஃபோட்டோ
ஷாப்பில் ஒரு
அழகான நிலாவை
வரைந்தேன்.
வானத்து நிலா
எனக்கு மாடலாக
இருக்க இன்னும்
வண்ணமயமாக்கினேன்
கணினித் திரையில்..

அந்த லேயரை
நகலெடுத்து
இன்னொரு நிலாவாக
ஒட்டினேன்.
அந்த நிலாவில்
மௌஸை வைத்து
தேர்வு செய்து அதனை
அப்படியே டிராக்
அன்ட் டிராப்பில் இழுத்து
வானத் திரையில்
விட்டேன்.
பூமியில் நன்றாய்
தெரிய தேவைக்கேற்ப
என்லார்ஜ் செய்தேன்.

அடுத்த நாள்
எல்லா செய்தித்
தாள்களிலும்
வானத்தில் இரண்டு
நிலாக்களென்பதே
தலைப்பு செய்தியாக
இருந்தது.

தேநீர் கடைகளில்
தேநீரை விட
சூடாக இருந்தன
நிலாச் செய்தி.

பரபரப்பான ஊழல்
விசாரணைகளும்
பாராளுமன்ற
சலசலப்புகளும்
மக்களுக்கு மறந்தே
போயிற்று.

அலுவலகங்களில்
அன்றாட அலுவல்களை
நிலா கிரகணமாய
மறைத்தது.
நாசா விஞ்ஞானிகளும்
இந்திய விஞ்ஞானிகளும்
விதவிதமாய் விளக்கம்
தெரிவித்தார்கள்.

நான் வரைந்து
வானத்தில் ஒட்டியதை
யார்தான் நம்பப்
போகிறார்கள்.

6 comments:

குமரி எஸ். நீலகண்டன் said...

ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

ஸ்ரீராம். said...

ஆஹா...நிலவை விட உயரத்தில் கற்பனை...!

குமரி எஸ். நீலகண்டன் said...

உங்கள் அன்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்

Anonymous said...

நல்ல கவிதை... அறிவியல் சிந்தனை

Anonymous said...

கவிதை நன்று நண்பரே...

குமரி எஸ். நீலகண்டன் said...

ரெவெரி அவர்களின் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி..