நரியும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்
பௌர்ணமி இரவில்
கொடியில் கொத்தாய்
தொங்கிய திராட்சை
நரிக்கு புளிக்கவில்லை.
குதித்தது.. எட்டவில்லை..
இன்னும் குதித்தது
எட்டவில்லை...
எட்டு முறை முயன்ற போது
எட்டாவது முறையே
எட்டிற்று..
வாயில் ரசம் சொட்டச் சொட்ட
கொத்து திராட்சை
நரியின் வயிற்றில்.
பின் சற்று உற்று
மேலாகப் பார்த்தது.
திராட்சை தொங்கிய
இடத்தில் பெரிதாய்
பால் வண்ணத்தில்
நிலா தொங்க
சளைக்காமல் குதித்துக்
கொண்டிருக்கிறது நரி...
கிடைக்காத போது
நரி நிலாவின் சுவையை
புளிக்குமென்று சொல்லுமா.
குமரி எஸ். நீலகண்டன்
பௌர்ணமி இரவில்
கொடியில் கொத்தாய்
தொங்கிய திராட்சை
நரிக்கு புளிக்கவில்லை.
குதித்தது.. எட்டவில்லை..
இன்னும் குதித்தது
எட்டவில்லை...
எட்டு முறை முயன்ற போது
எட்டாவது முறையே
எட்டிற்று..
வாயில் ரசம் சொட்டச் சொட்ட
கொத்து திராட்சை
நரியின் வயிற்றில்.
பின் சற்று உற்று
மேலாகப் பார்த்தது.
திராட்சை தொங்கிய
இடத்தில் பெரிதாய்
பால் வண்ணத்தில்
நிலா தொங்க
சளைக்காமல் குதித்துக்
கொண்டிருக்கிறது நரி...
கிடைக்காத போது
நரி நிலாவின் சுவையை
புளிக்குமென்று சொல்லுமா.
8 comments:
அருமை.
ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...
எட்டாத நிலவின் மேல்
எழுதிக் கொண்டே இருக்கிறோம் கவிதைகள்.
கிட்டாதாயினும் பால்நிலவைப்
புளிக்குமென சொல்லாது நரியென்றே
நினைக்கிறேன்:)!
நிலவு புளிக்குமோ என்னவோ...கால் வலிக்கும்!
எனக்கு இது ஒரு நிலாக்காலம். நன்றி ராமலக்ஷ்மி...
மிக்க நன்றி ஸ்ரீராம்.... உங்கள் வருகைக்கும் அன்பிற்கும்...
நன்றாக உள்ளது...சூர்யா
நன்றி சூர்யா....
Post a Comment