Saturday, August 13, 2011

நிலாக் காவல் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நிலாக் காவல்
குமரி எஸ். நீலகண்டன்

நடந்து கொண்டே
இருந்தேன். என்னைத்
தொடர்ந்து கொண்டே
இருந்தது நிலா.

இரவின் தனிமை
என்னை
அச்சமூட்டவில்லை...
நடந்த தூரங்கள் முழுக்க
தொடர்ந்து உரையாடிக்
கொண்டே வந்தது நிலா...

நான் நுழைந்த
அந்த வீட்டிற்குள்
மட்டும் நுழையவில்லை
அந்த நிலா..

எவ்வளவு நேரம்
எனக்காக வெளியே
காத்திருந்ததோ
எனக்குத் தெரியவில்லை...

8 comments:

Anonymous said...

நல்லாருக்கு பாஸ்

ராமலக்ஷ்மி said...

//நடந்த தூரங்கள் முழுக்க
தொடர்ந்து உரையாடிக்
கொண்டே வந்தது நிலா... //

அருமை. ரசித்தேன்.

நல்ல கவிதை.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

சதீஷ் குமார் அவர்களின் அன்பு வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

குமரி எஸ். நீலகண்டன் said...

ராமலக்ஷ்மி... உங்களின் நிறைவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி

குமரி எஸ். நீலகண்டன் said...

ரத்னவேல் ஐயா அவர்களின் அன்பிற்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்..

ஸ்ரீராம். said...

நல்லாயிருக்கு.

//"எவ்வளவு நேரம்
எனக்காக வெளியே
காத்திருந்ததோ
எனக்குத் தெரியவில்லை..//

"...காலை வெளியில் வந்து பார்த்தபோது காணோம்".....!!

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ஸ்ரீராம்...