Friday, July 22, 2011

பூனைக் குட்டியும் நிலாவும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

பூனைக்குட்டியும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்

நிலாவை இதுவரைப்
பார்த்திராத பூனைக்குட்டி
திடீரென நிலாவைப்
பார்த்து பயந்தோடியது..

நிலா துரத்த துரத்த
பூனைக்குட்டி
இன்னும் வேகமாய்
ஓடிப் பின்னால்
மேலேப் பார்த்தது,.

நிலா ஒரு மேகத்துள்
மறைந்திருந்து நோட்டம்
விடுவது போல்
பூனைக்குத் தோன்றிற்று.

பூனை வேகமாய்
ஒரு புதரில் மறைந்து
நிலாவைப் பார்க்க
நிலா மீண்டும்
மேகக் குகையிலிருந்து
வெளியே வந்து துரத்த
பூனைக்குட்டி ஓடிஓடி
ஒரு வீட்டிற்குள்
நுழைந்தது.

சீறும் பூனைக்குட்டியைக்
கண்டு பயந்த
மூன்று வயது குழந்தை
ஓடிப்போய்
அம்மாவின் மடியில்
விழுந்து அழ
அம்மா நிலாவைக்
காட்டி குழந்தையை
சமாதானப் படுத்தினாள்...
நிலாதான் குழந்தையின்
அழுகையின் ஆரம்பமென
அறியாது...

6 comments:

சாந்தி மாரியப்பன் said...

கவிதை அருமையாயிருக்கு..

ராமலக்ஷ்மி said...

மிகவும் ரசித்து வாசித்த கவிதை:)!

புது டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...

ஒரு வட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்!

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி அமைதிச்சாரல். உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி. நான் டெம்ப்ளேட் இதுவரை மாற்றவே இல்லை. ஆனாலும் அது பழையதாகத் தெரியாமல் என்றும் புதிதுபோல் தோற்றமளிப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.

குமரி எஸ். நீலகண்டன் said...

ஸ்ரீராம் நலம்தானே.. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.