Saturday, January 8, 2011

பல்லியின் சாபம் - வல்லமை இதழில் வெளியான கவிதை

பல்லியின் சாபம்
குமரி எஸ். நீலகண்டன்

சன்னலை அடைத்த போது
அந்த சப்தத்தில்
அச்சமுற்ற பல்லி
தப்பிக்க நினைத்து
இடுக்கின் இடையேத்
தலையை விட்டது.

குற்றுயிரில்
சபித்த பல்லியை
அடித்துக் கொன்றேன்
அதன் வலியற்ற
மரணத்திற்காக..

சபித்த பல்லிக்கு
எங்கேத்
தெரியப் போகிறது
என் சங்கடம்

4 comments:

ம.தி.சுதா said...

உண்மை தான் அருமையாக இருக்கிறது...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றிகள் ம.தி.சுதா அவர்களுக்கு

Prem S said...

arumaiyana kavithai

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி பிரேம் குமார் அவர்களுக்கு....