Sunday, November 7, 2010

அப்பாவின் குடை - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

6.11.10


அப்பாவின் குடை




மூட்டெலும்புகள் உடைந்து
மடங்காமல் முடங்கியது
அப்பாவின் குடை.
சிகிச்சைக்கு
வழக்கமான
இடத்திற்கேச் சென்றேன்.
அப்படியே இருந்தான்
அப்பாவின் குடைக்காரன்
அதே இளமையுடன்
அதே இடத்தில்.

சரி செய்ய முடியுமா என்று
குடைக்காரனிடம் கேட்டேன்.
சரி செய்து விடலாம்
என்றவன் சரி செய்து
கொண்டே அப்பா
எப்படி இருக்கிறார் என்றான்.
அப்பாவைக் காப்பாற்ற
முடியவில்லை என்றேன்
வருத்தத்துடன்.
அப்படியா....அதான்
அப்பாவைக் காணவில்லை...
என்றவன் சரி செய்த
குடையை விரித்தான்.
விரித்த கருங்குடைக்குள்
அப்பாவிற்கே உரிய
சிரிப்பு மழை
இடி முழக்கமாய்.....

2 comments:

Asiya Omar said...

அருமையான உணர்வுள்ள எழுத்துக்கள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

உமரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்