Tuesday, January 1, 2013

மீண்டும் வலைப்பூவில் ஆகஸ்ட் - 15 என்ற புதினக் குழந்தையோடு

இணைய தள நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்... சுமார் ஒன்பது மாத இடைவெளிக்கு பின் மீண்டும் இடுகைகளுடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அந்த ஒன்பது மாத இடைவெளியானது ஆகஸ்ட் 15 என்ற எனது புதினக் குழந்தையை பெறுவதற்கான பிரசவ விடுப்பு... 502 பக்கங்களுடன் அந்த நாவல் நூல் வடிவில் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது....
















இனி இந்த நூல் குறித்து....
ஆகஸ்ட் 15

இந்த நாளில் பிறந்த சத்யா (2000), கல்யாணம்(1922), பாரதமாதா(1947) ஆகியோரின் வாழ்க்கையின் பின்னணியில் உருவான புதினம் இது. இதுவரை எழுதப்படாத ஒரு புதிய உத்தியில் எழுதப்பட்ட நாவல் இது. 

 கல்யாணம்.
 காந்தியின் செயலாளர்.

காந்தி இறப்பதற்கு முந்தைய நான்கு வருடங்களில் அவரது தனிச் செயலராக இருந்தவர் கல்யாணம் . காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது காந்தியின் வெகு அருகில் சில அங்குல தூரத்தில் நின்றவர். காந்தி இறந்தபின் கல்யாணம் பஞ்சாபில் இயங்கிய கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள மீட்புக் குழுவில் லேடி மவுன்ட் பேட்டனோடு பணியாற்றினார். புதுடெல்லியில் லேடி எட்வினா மவுன்ட் பேட்டனோடு சேர்ந்து அகதிகள் நிவாரணப்பணியிலும் அவர்களின் மறுவாழ்விற்காக ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைந்த பணியிலும் ஈடுபட்டார். அதன்பின் ரிஷிகேஷில் மீராபென் நடத்திவந்த பசுலோக் ஆஸ்ரமத்தில் ஒரு வருடம் பணியாற்றினார்....

கதையின் தொடர்ச்சி ....   ஆகஸ்ட் 15 நூலில்.......

புத்தகங்களை கீழ்கண்ட முகவரிகளில் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் பெறலாம்.


Discovery Book Palace (P)Ltd
No.6, Magavir Comlex, 1st Floor
Munusamy Salai, K K Nagar West
Chennai - 600078
Tamil Nadu, India. 
(Near Pondichery Guest house)

Ph"+91 44 65157525 , Cell +91 9940446650


Mail: discoverybookpalace@gmail.com

http://discoverybookpalace.com/brands.php?brand=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D

New Book Lands
52-C, North Usman Road,
T'Nagar, Chennai - 600017,
Tamilnadu, INDIA.
Phone: 91-044-28158171 / 28156006
Fax : 91-044-42123839
Email : orders@newbooklands.com / enquiry@newbooklands.com



4 comments:

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

சக்தி said...

மிக மகிழ்ச்சி..வாழ்த்துக்கள் தோழரே !
விரைவில் வாங்கிப் படித்துவிட்டு எழுதுகிறேன் !
உமாமோகன்

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி ராமலக்ஷ்மி... உங்களுக்கும் எனது மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

குமரி எஸ். நீலகண்டன் said...

தோழி சக்தி அவர்களுக்கு நன்றி... புத்தகத்தை படித்து விட்டு உங்கள் கருத்தை மிகுந்த ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.