Thursday, January 3, 2013

" ஆகஸ்ட் 15 " நூலுக்கு பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதி.....

" ஆகஸ்ட் 15 " நூலுக்கு பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதி.....

ஆகஸ்ட் 15
இந்த நாள் ஒரு தலைமுறைக்கு இந்தியருக்கு விசேஷமாக இருந்தது. இலட்சியம், நாணயம், உண்மை ஆகியவற்றுக்கு நினைவூட்டலாக இருந்தது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் ருஷ்டி அவருடைய ‘’நடுநிசிக் குழந்தைகள்’’ எழுதிய போதே இந்தத் தேதி வரலாற்றுக்குள் புகுந்த இன்னொரு நாளாகப் போய் விட்டது.
நண்பர் நீலகண்டன் மேற்சொன்னது உண்மையல்ல என்று நிரூபிப்பது போல ஒரு அபூர்வமான இலக்கியப் படைப்பை உருவாக்கியிருக்கிறார். நிஜம், புனைக் கதை இரண்டும் பின்னிப் பின்னி வந்து இது இறுதியில் ஓர் நம்பிக்கையூட்டும் செய்தியை நமக்குத் தருகிறது. இதில் வரும் ஒரு பாத்திரத்தின் அசலை நான் நன்கு அறிவேன். இந்த நூல் நமது நாடு, நமது ஆரம்ப கால இலட்சியப் போக்கு, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் நமது பாரம்பரியம் ஆகிய மூன்றுக்கும் அஞ்சலி செலுத்துவதாக இருக்கிறது.

1 comment:

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள் சார். இணையத்திலும், ராமலக்ஷ்மி பக்கத்திலும் ஏற்கெனவே படித்துத் தெரிந்து கொண்டேன். சமீபத்தில் துக்ளக் பத்திரிகையில் 'புத்தக விமர்சனம்' பகுதியிலும் விமர்சனம் படித்தேன். பெரிய காரியம் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.