Monday, December 26, 2011

ஊனப் பிள்ளையார் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

ஊனப் பிள்ளையார்
குமரி எஸ். நீலகண்டன்

அடுக்கு மாடிக் குடியிருப்பின்
கீழ் தளத்தின் குறுஞ்சுவரில்
கையொடிந்த பிள்ளையார்
அண்டுவார் யாருமின்றி....
பட்டினியாய்... பரிதாபமாய்...

இரண்டு தினம் முன்பு
ஆறாவது மாடி
அனந்த நாராயணன்
வீட்டுப் பூஜை அறையில்
புஷ்டியான கைகளுடன்
பருத்த  வயிறோடு
மோதகப் பாத்திரத்துடன்
பார்த்த நினைவு.

6 comments:

ராமலக்ஷ்மி said...

தெய்வத்துக்கான பராமரிப்பு கூட அவர் சொந்தமாக இருந்தால்தான் எனும் மனித குணத்தை உணர்த்துகிற சிறப்பான கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

அண்டுவார் யாருமின்றி ஒரு பிள்ளையாரைப் பாரத்த போது அந்த சிலைக்குள் சித்திரமாகத் தெரிந்தது எனக்கு இந்தக் கவிதை. மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

Rathnavel Natarajan said...

அருமை.

குமரி எஸ். நீலகண்டன் said...

ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...

ஸ்ரீராம். said...

தெய்வத்திடம் கூடக் கட்டத் தவறவில்லை மனித குணத்தை!

ஸ்ரீராம். said...

மன்னிக்கவும் "காட்டத் தவறவில்லை...."