Monday, October 24, 2011

நிலவைச் சீண்டிய காற்று - வல்லமை இதழில் வெளியான கவிதை

நிலவைச் சீண்டியக் காற்று
குமரி எஸ். நீலகண்டன்

காற்று மரத்தின்
கிளைகளாய் நீண்ட
கம்புகளை வைத்து
சதா நிலாவை
அடித்துக் கொண்டே
இருக்கிறது.


கிளைகளின் அசைவில்
தேன் கூட்டிலிருந்து
தேன் சொட்டிற்று.


கூரிய இலைகள்
நிலாவைக்
கீறிய போது
மரத்திலிருந்து
நட்சத்திரங்களாய்
ஒளிப் பூக்கள்
சொட்டின.


திறந்த வெளியில்
நிலாவைப் பார்த்தேன்.
நிலாவின் முகத்தில்
இல்லை எந்த
தழும்புகளும்.


மரம் நிலவை
அடிக்கிறதா...
அணைக்கிறதா...

6 comments:

ஸ்ரீராம். said...

அருமை.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ஸ்ரீராம்...

ராமலக்ஷ்மி said...

//நிலாவின் முகத்தில்
இல்லை எந்த
தழும்புகளும்.//

நிலவிடம் கற்றுக் கொள்ள வேண்டும் சீண்டல்களைப் பொருட்படுத்தாமலிருக்க.

கவிதை மிக நன்று.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

Rathnavel Natarajan said...

அழகு கவிதை
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_24.html

குமரி எஸ். நீலகண்டன் said...

ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...