நிலாவும் முதலையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை
நிலவும் குட்டி முதலைகளும்
குமரி எஸ். நீலகண்டன்
சலனமற்ற இரவில்
சல்லாபமாய்
மிதந்து கொண்டிருந்தது
பிறைநிலா
அந்தப் பெரிய குளத்தில்...
குத்து வாள் போலிருந்த
அதன் கூர்பகுதிகளிரண்டிலும்
குட்டி முதலைகள் தனது
முதுகைச் சொறிந்து
கொண்டன.
4 comments:
ஹா..ஹா...கற்பனைக்கு எல்லை ஏது? சுவையான கற்பனை. இதைப் படித்ததும் என் பள்ளி வயதில் கூட இருந்த நண்பன் ஒருவன் 'பிடியிழந்த அரிவாள் போல பிறை நிலவு தோன்றுதம்மா' என்று எழுதி வைத்திருந்தான்..அதை ரசித்தது நினைவுக்கு வருகிறது!
மிக்க நன்றி ஸ்ரீராம்... பிடியிழந்த அரிவாள் போல் பிறை நிலவு தோன்றுதம்மா... அருமையான வரிகள். அந்த வரிகளுக்குரியவர்க்கு எனது அன்பான வணக்கங்கள்.
நல்ல கற்பனை:)! மேலும் ரசிக்கக் காத்திருக்கிறோம்.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி உங்கள் வாழத்துக்களுக்கும் காத்திருத்தலுக்கும்...
Post a Comment