Wednesday, September 14, 2011

நிலவும் காகமும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நிலவும் காகமும்
குமரி எஸ். நீலகண்டன்

அந்த நகரத்தின் நடுவே
ஒற்றை அடையாளமாய்
இருந்த அந்த
பழைய அரசமரமும்
அன்று வெட்டி
சாய்க்கப் பட்டது.

கிளையோடு விழுந்த
கூட்டின் குஞ்சுகளுக்கு
நிலாவைக் காட்டி
நாளை அந்த
கூட்டிற்கு போகலாம்
யாரும் எதுவும்
செய்ய முடியாதென
சமாதானம் கூறி
வாயில் உணவை
ஊட்டிற்று தாயன்போடு
காகம்.

10 comments:

rajamelaiyur said...

//
கூட்டிற்கு போகலாம்
யாரும் எதுவும்
செய்ய முடியாதென
சமாதானம் கூறி
வாயில் உணவை
ஊட்டிற்று தாயன்போடு
காகம்.
//
அருமையான வரிகள்

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராஜபாட்டை ராஜா... உங்கள் அன்பிற்கும் கருத்திற்கும்...

ஸ்ரீராம். said...

பரிதாபப் பட வைத்த காட்சிக் கற்பனை. நிலா சீரிஸ் இன்னும் தொடருதா...

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ஸ்ரீராம்... இன்னும் இருக்கிறது நிலாத் தொடர்.. படிப்பவர்களை கடினப்படுத்துகிறதா நிலாத் தொடரென என்னால் ஊகிக்க இயலவில்லை...

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான கவிதை.

/கடினப் படுத்துகிறதா/

நிச்சயம் இல்லை. ஆச்சரியப் படுத்துகின்றன.

நிலாச்சிரிப்பு வாசித்த பின் இந்த வளர்பிறை நாளுக்கு நாள் வாய் அகலச் சிரிப்பதாகவே ரசித்தேன்.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி. உங்கள் கருத்துக்கள் எனக்கு இன்னும் ஊக்கத்தை அளித்திருக்கின்றன.

ஸ்ரீராம். said...

கடினப் படுத்தவில்லை. நிலாவோடு ஒவ்வொன்றாக சம்பந்தப் படுத்தி இவ்வளவு தொடர்ந்து சொல்ல முடிகிறதா என்ற ஆச்சர்யம்தான்!

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ஸ்ரீராம். இப்போது என்னால் இன்னும் தைரியமாய் நிலாவைப் பற்றி நிறைய கவிதைகள் தர முடியும்.

உமா மோகன் said...

nilaavilkudiyearaa varai nammaal aabathillai!

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி சக்தி மேடம்