Monday, September 5, 2011

நிலாச் சிரிப்பு - திண்ணை இதழில் வெளியான கவிதை

நிலாச் சிரிப்பு
குமரி எஸ். நீலகண்டன்

நாளுக்கு நாள்
கூட்டிக் குறைத்து
சிரித்தாலும் 


வாயை அகல
விரித்து சிரித்தாலும்
பிறையாக
வளைத்து சிரித்தாலும்


முகம் முழுக்க
விரிய சிரித்தாலும் 


மற்றவர்கள் நம்மோடு
சிரித்தாலும்
சிரிக்காமல்
புறக்கணித்தாலும்


சிரிப்பானது
எல்லோருக்கும்
குளுமையாக்த்தான்
இருக்கிறது.

சதா புன்னகைத்துக்
கொண்டே இருக்கும்
நிலவை பார்த்துத்தான்
சொல்கிறேன்.

6 comments:

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

நிலா சிரிப்பு நீலகண்டனின் கவிதை வெளி..வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com

குமரி எஸ். நீலகண்டன் said...

தீரன்சாமி அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

ஸ்ரீராம். said...

//சதா புன்னகைத்துக்
கொண்டே இருக்கும்
நிலவை பார்த்துத்தான்
சொல்கிறேன்.
//

நிலவைப் பார்த்து நீல(கண்ட)ன் சொன்னதா...

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ஸ்ரீராம்...உங்கள் அன்பிற்கும் வருகைக்கும்

ராமலக்ஷ்மி said...

இனி நிலவைப் பார்க்கும் போதெல்லாம் திருப்பிச் சிரிக்கத் தோன்றும். அருமையான கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

எல்லோருக்கும் எந்த பாகுபாடுமின்றி மகிழ்ச்சி தருவது இயற்கை மட்டும்தான். மிக்க நன்றி ராமலக்ஷ்மி...