Friday, August 26, 2011

காற்றும் நிலவும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

காற்றும் நிலவும்
குமரி எஸ். நீலகண்டன்

சிதறிக் கிடந்த
கருமேகங்களைக்
கூட்டி அதற்குள்
மறைந்து மறைந்து
போனது நிலா.

காற்று அந்த
கருந்திரையைக்
கலைத்துக் கலைத்து
நிலாவின் முகத்தை
அம்பலமாக்கியது.

கருந்திரை எங்கோ
பறந்து போக
முகம்மூட
ஆடை தேடி
மிதந்து சென்று
கொண்டிருந்தது நிலா.

நிலவுடன் காற்று
காதல் விளையாடிக்
கொண்டிருக்க...
மேகத்தைக் கலைத்து
மழையைக் கொண்டு
சென்று விட்டதாக
காற்றைக் கடுமையாய்
திட்டிக் கொண்டு
சென்று கொண்டிருந்தனர்
பலரும்.

11 comments:

ப.மதியழகன் said...

கவிதை எதார்த்தமாகவும்,சித்தரிப்பு அருமையாகவும் இருந்தது.இணைய இதழ்(நவீன விருட்சம்,திண்ணை,கீற்று,பதிவுகள்,வார்ப்பு,வடக்குவாசல்) மற்றும் இலக்கிய சிற்றிதழ்களில் எழுதி வரும் எனது இரண்டாவது கவிதை தொகுப்பு வெளிவந்துள்ளது.உடுமலை.காம்ல் வாங்கலாம்.முகவரி udumalai.com/?prd=sathurangam&page=products&id=10029

ஸ்ரீராம். said...

நிலவோடு வான்முகில் விளையாடுதே...பாடல் நினைவுக்கு வருகிறது. நிர்வாணத்துக்கு அம்பலம் மாற்றாகியிருக்கலாமோ...

மாலதி said...

நிலவுடன் காற்று
காதல் விளையாடிக்
கொண்டிருக்க...
மேகத்தைக் கலைத்து
மழையைக் கொண்டு
சென்று விட்டதாக
காற்றைக் கடுமையாய்
திட்டிக் கொண்டு
சென்று கொண்டிருந்தனர்
பலரும்.எதார்த்தமாகவும்,சித்தரிப்பு அருமையாகவும் இருந்தது

ராமலக்ஷ்மி said...

அருமையான கவிதை. ஸ்ரீராம் கூறியிருப்பதும் பொருத்தமாகத் தோன்றுகிறது.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி மதியழகன். உங்களின் இரண்டாவது கவிதை தொகுப்பிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து நிறைவான நிறைய நூல்கள் வர வாழ்த்துக்கள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

அன்பு ஸ்ரீராம்... அம்பலமாக்கி விட்டேன். அம்பலமாகி விட்டது.. மிக்க நன்றி..

குமரி எஸ். நீலகண்டன் said...

மாலதி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

குமரி எஸ். நீலகண்டன் said...

ஸ்ரீராம் கூறியது சரிதான்... மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

ஸ்ரீராம். said...

உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

/உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி./

ஆம் ஸ்ரீராம், அவருக்கு என் பாராட்டும்:)!

குமரி எஸ். நீலகண்டன் said...

நல்ல நோக்கத்திற்காக எழுதப் படுபவை கவிதைகள்... அதற்கு துணை நிற்கும் உங்களுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும்... அன்பிற்கும் நட்பிற்குமுரிய ஸ்ரீராம், ராமலக்ஷ்மி இருவருக்கும் என் நன்றிகள்...