நிலா மொழி
குமரி எஸ். நீலகண்டன்
எனது அம்மாவுடன்
நான் களித்த எனது
அம்புலிப் பருவத்திலிருந்தே
உன்னைக் காண்கிறேன்...
இன்றும் நீ
அப்படியே இருக்கிறாய்
என்றேன் நிலாவைப்
பார்த்து வியந்து...
அதற்கு நிலா சொன்னது
நாற்பது ஆண்டுகளாய்
நானும் உன்னைக்
காண்கிறேன்..
அப்போது போலில்லை
நீ இப்போது.
மிகவும் மாறி
விட்டாய்.. என்று
வருத்தத்துடன்
சொன்னது..
இன்னும் சொன்னது...
நான் மாறி விட்டாயென்று
சொன்னது உன்
உருவத்தை மட்டுமல்ல...
என்றது குறிப்பாய்.
குமரி எஸ். நீலகண்டன்
எனது அம்மாவுடன்
நான் களித்த எனது
அம்புலிப் பருவத்திலிருந்தே
உன்னைக் காண்கிறேன்...
இன்றும் நீ
அப்படியே இருக்கிறாய்
என்றேன் நிலாவைப்
பார்த்து வியந்து...
அதற்கு நிலா சொன்னது
நாற்பது ஆண்டுகளாய்
நானும் உன்னைக்
காண்கிறேன்..
அப்போது போலில்லை
நீ இப்போது.
மிகவும் மாறி
விட்டாய்.. என்று
வருத்தத்துடன்
சொன்னது..
இன்னும் சொன்னது...
நான் மாறி விட்டாயென்று
சொன்னது உன்
உருவத்தை மட்டுமல்ல...
என்றது குறிப்பாய்.
6 comments:
நிலவின் மொழியில் பொய் இருக்காதுதான். அருமையான கவிதை.
உண்மைதான். நிலவு பொய் சொல்வதில்லை. நன்றி ராமலக்ஷ்மி.
பருவத்திற்க்கு பருவம் மனிதனின் சுபாவம், குணங்கள் மாறிக் கொண்டேதான் இருக்கும்...
நிலவை மையப்படுத்திய அழகிய கவிதை
நன்றி கவிதை வீதி சௌந்தர்....
அருமை.
ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
Post a Comment