Thursday, June 30, 2011

காற்றும் நானும் - திண்ணை இதழில் வெளியான கவிதை

காற்றும் நானும்
குமரி எஸ். நீலகண்டன்

ஆழ்ந்த உறக்கத்தினிடையே
அடித்த காற்றில்
வெளியே பறந்த
தெருத்தூசுகளோடு
அடித்து கொண்டிருந்த
சன்னல் கதவின்
அகண்ட வெளிகளோடு
தொலைந்து போயிற்று
தூக்கமும்.

விழிகளை அடைத்து
இருண்ட வெளியில்
புரண்டு புரண்டு
காற்றோடு மிதந்து
போன தூக்கத்தை
இமைகளின் முடிகளால்
கட்டி இழுக்க எத்தனித்தேன்...
என்னையே இழுக்கிற
காற்றில் எதுவுமே
நடக்கவில்லை.

சுழலும் காற்று
சூழ்ந்த இரவில் பற்பல
பகற் கனவுகளோடு
புரளும் நான்...

8 comments:

ராமலக்ஷ்மி said...

காற்றில் தொலையாது இந்தக் கவிதை.

//சுழலும் காற்று
சூழ்ந்த இரவில் பற்பல
பகற் கனவுகளோடு //

வரிகள் அருமை.

கே. பி. ஜனா... said...

காற்றில் மிதந்து வரும் கவின் கவிதை!

ஸ்ரீராம். said...

சென்னையில் காற்றைப் பற்றி இப்படி கற்பனையில் கவிதை எழுதினால்தான் உண்டு....! சுகமான கற்பனை.

கதிரவன் said...

இன்னும் அந்த காலத்திலே
இருக்கீங்களே
ஜன்னலை சாத்திட்டு
A/c-யை போட்டுக்கொண்டு
தூங்குங்க சார்

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி

குமரி எஸ். நீலகண்டன் said...

கே.பி. ஜனா அவர்களுக்கு நன்றி

குமரி எஸ். நீலகண்டன் said...

ஸ்ரீராம்...அகத்துள் காற்றடித்தால் நமக்கு ஆரோக்கியம்தானே. அதுவும் கற்பனையில் மட்டும்தான் சாத்தியம்.

குமரி எஸ். நீலகண்டன் said...

கதிரவன் உங்கள் வருகைக்கு நன்றி.AC ஐ போட்டிட்டு தூங்கலாம்.. ஆனால் மின்சாரம் போனால் கனவினில்தான் குளிர வேண்டும்.. மின்சாரத்திற்கு எங்கே போவது?