Wednesday, June 22, 2011

பசுவும் நிலாவும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

பசுவும் நிலாவும்
குமரி எஸ். நீலகண்டன்

                                                    
பௌர்ணமி இரவின்
பரந்த வெளியில்
கொட்டகைத் தொட்டியில்
கொட்டிய கழனியை
சப்பி சப்பி
குடித்தது பசு.

நிலா மிதந்த
கழனியை மென்று
மென்று சுவைத்தது.
மிகுந்த சுவையாய்
இருந்ததாய் சிலாகித்தது.

மெல்ல மெல்ல
வாய்க்கு பிடிபடாமல்
தொட்டியில் எஞ்சிய
கழனியிலேயே கொஞ்சி
விளையாடியது நிலா.

கன்று வாய் வைத்ததும்
காணாமல் நிலா போக
பசு கன்றைப்
பார்த்தது சந்தேகமாக...

8 comments:

ஸ்ரீராம். said...

அருமையான கற்பனை.

ராமலக்ஷ்மி said...

நவீன விருட்சத்திலேயே ரசித்து வாசித்து விட்டிருந்தேன். மிக அழகான கற்பனை.

குமரி எஸ். நீலகண்டன் said...

ஸ்ரீராமிற்கும் ராமலக்ஷ்மிக்கும் மிக்க நன்றிகள்...

கே. பி. ஜனா... said...

அழகிய கற்பனை!

அம்பாளடியாள் said...

அழகிய கற்பனைவளம்கொண்டு தீட்டிய கவிதை அருமை அருமை!..வாழ்த்துக்கள்
மென்மேலும் வளர........

குமரி எஸ். நீலகண்டன் said...

அம்பாளடியாள் அவர்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..
கே.பி. ஜனா அவர்களுக்கும் நன்றிகள்

Thangamani said...

'பசுவும் நிலாவும்'கவிதை அழகு!அருமை!!
உங்கள் ரசனையை ரசித்தோம்!

அன்புடன்,
தங்கமணி.

குமரி எஸ். நீலகண்டன் said...

தங்க மணி அம்மா அவர்களுக்கு வணக்கங்கள். உங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது... நன்றிகள்