Friday, June 10, 2011

கண்ணீரின் புனிதம் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

கண்ணீரின் புனிதம்
குமரி எஸ். நீலகண்டன்

உப்பெல்லாம் கண்ணீரில்
கரைந்து விடுவதால்
உணர்வுகளும் கண்ணீரோடு
கரைந்து விடுமாவெனத்
தெரியவில்லை.

கன்னத்தில் சொட்டுகிற
கண்ணீர் சுத்தமானதா
அசுத்தம் கலந்ததாவென
அறிய இயலவில்லை.
தோண்டி விட்டார்களா
ஊற்றாய் ஊறி
வந்ததாவெனவும்
தெரியவில்லை.

ஆனால் அனுதாப
அலைகளால்
அனைவரையும்
சுனாமியாய் அபகரிக்க
இயல்கிறது சில துளி
சொட்டும் கண்ணீரால்.

5 comments:

ராமலக்ஷ்மி said...

புனிதம் கண்ணீருக்குப் பொருந்துமா எனக் கேள்வி எழுப்பிச் செல்லுகிற கவிதை. நன்று நீலகண்டன்.

ஸ்ரீராம். said...

கண்ணீர் ஆராய்ச்சி. அருமை.

குமரி எஸ். நீலகண்டன் said...

ராமலக்ஷ்மி, கூடல்பாலா, ஸ்ரீராம் அனைவருக்கும் எனது அன்பு நிறைந்த நன்றிகள்

Anonymous said...

அருமையான கவிதை. சூர்யா

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி சூர்யா