Thursday, May 19, 2011

அறியாப் பிறவி - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

அறியாப் பிறவி
குமரி எஸ். நீலகண்டன்

நான் கோபக்காரன்
கொலைகாரன்
காட்டுச் சிங்கமென்று
எனது கவிதை
நாயகனுக்குத் தெரியாது.

அப்பாவியாய்
அபகரிக்க வல்லவனாய்
எண்ணி என்னை
அன்றாடம் அலைக்கழிக்கும்
சூன்யக்காரனான
அவனறிய மாட்டான்
நான் அவனை
அவ்வப்போது எழுத்தால்
கண்டந்துண்டமாய்
வெட்டிப் பிளப்பதை.

பாவம் அவன்
என் கவிதைகளைப்
படிப்பதில்லை.
கவிதைகளும்
அவனுக்குப் பிடிப்பதில்லை.

7 comments:

ராமலக்ஷ்மி said...

//பாவம் அவன்
என் கவிதைகளைப்
படிப்பதில்லை.//

ரொம்ப செளகரியமாய் போயிற்று நம் போன்றோருக்கு:)!

//கவிதைகளும்
அவனுக்குப் பிடிப்பதில்லை.//

அது பற்றிய கவலை நமக்கு இல்லை:)!

அருமையான கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

ராமலக்ஷ்மி கவிதைக்கான உங்கள் பதிலும் அருமை... நன்றிகள்

Yaathoramani.blogspot.com said...

அவனுக்கு கவிதை பிடித்திருந்தால்தான்
அவன் நல்லவனாக இருந்து தொலைத்திருப்பானே
நமக்கும் வெட்டும் அலுப்பு மிச்சம்
நாமும் வேறு வேலை பார்க்கலாம்
என்ன செய்வது
இன்றைய சூழலில் இதுபோன்றவர்களை
தவிர்கவும் இயலவில்லை
ஏற்கவும் மனம் இடம் தருவதில்லை
இதுபோன்று கவி நெய்தாவது
ஆறுதல் அடைந்து கொள்ளவேண்டியதுதான்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

குமரி எஸ். நீலகண்டன் said...

ரமணி .....நாம் நேரில் பேசியது போல் ஒரு உணர்வை தந்தது உங்கள் கருத்துக்கள்... உங்கள் அன்பிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்

Anonymous said...

நல்ல கவிதை. சூர்யா

கே. பி. ஜனா... said...

nallaarukku!

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றிகள் சூர்யா... கே.பி. ஜனா அவர்களுக்கும்...