Wednesday, May 11, 2011

வனவாசம் - திண்ணை இதழில் வெளியான கவிதை

வனவாசம்
குமரி எஸ். நீலகண்டன்

பசுமையற்ற
காங்கிரீட் காடுகளினிடையே
விலங்குகள் விலக்கிய
வீச்சம் நிறைந்த
வீதி நதிகளின்
விஷ வாசத்தினூடே
நான்கு சக்கர கால்களுடன்
காட்டுக் கத்தலில்
நகர்ந்து செல்கிற
சிங்கங்கள், புலிகள்,
காட்டு யானைகள்,
கரடிகள், பன்றிகள்,
குள்ள நரிகள்,
விஷப் பூச்சிகள்,
கண்ணாடி முட்கள்,
காட்டு ராஜாக்களின் மிரட்டல்
இவற்றினிடையே பலஹீனமான
ஒரு காட்டு வாசியின்
அச்சத்துடன்
கடந்து செல்கிறேன்
காடுகளை
வேட்டைக் கருவிகள் ஏதுமின்றி
வெறும் நம்பிக்கைகளுடன்.

9 comments:

கே. பி. ஜனா... said...

//நான்கு சக்கர கால்களுடன்//
நல்ல கற்பனை!

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல்...

ராமலக்ஷ்மி said...

சிறப்பான கவிதை.

கான்க்ரீட் காட்டில் நம்பிக்கைகள் மட்டுமே நம்மை செலுத்திக் கொண்டிருக்கின்றன.

Yaathoramani.blogspot.com said...

அருமையான சிந்தனை
அசத்தலான பதிவு
வேட்டைக் கருவிகள் ஏதுமின்றி
வெற்று நம்பிக்கையுடன்...
நல்ல வார்த்தைப் பிரயோகம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

குமரி எஸ். நீலகண்டன் said...

பேரன்பிற்குரிய நண்பர்கள் கே.பி.ஜனா, நாஞ்சில் மனோ, ராமலக்ஷ்மி, ரமணி யாவருக்கும் என் நன்றிகள்...

Anonymous said...

மிக அருமையான கவிதை. சூர்யா

ஸ்ரீராம். said...

வேட்டைக் கருவிகள் ஏதுமின்றி வேற்று நம்பிக்கைகளுடன்....கான்க்ரீட் காட்ட்டிடையே நான்கு சக்கர கால்...அருமை. என்னதான் பலஹீனமான என்று வந்தாலும் காட்டு வாசியின் அச்சத்தோடு என்பதற்கு பதில் எச்சரிக்கையுடன் என்றிருந்திருக்கலாமோ?!!

Thenammai Lakshmanan said...

அருமை நீலகண்டன்..

குமரி எஸ். நீலகண்டன் said...

நண்பர்கள் சூர்யா மற்றும் ஸ்ரீராம் மிக்க நன்றி ... ஸ்ரீராம்... ஒரு பயந்த பலஹீனமான இயல்புடைய காட்டுவாசி எப்படிக் காட்டைக் கடந்து செல்வானோ அந்த இயல்பான அச்சத்தையே இங்கும் குறிப்பிட்டேன். நீங்கள் குறிப்பிட்ட எச்சரிக்கையுடன் என்ற வார்த்தையும் அந்த இடத்தில் பொருத்தமானதுதான்.. நன்றிகள்..
தேனம்மை அவர்களின் அன்பு வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்