Friday, April 29, 2011

அவனின் தேடல் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

அவனின் தேடல்
குமரி எஸ். நீலகண்டன்

சில்லென உடையும்
உன் சிரிப்பில்
அரசியல்வாதியின் சில்லரை
சப்தம் கேட்கிறது..

பகட்டான உன் வாசம்
என்னை பயமுறுத்துகிறது..

உன் உபச்சாரத்தை
பலரும்
விபச்சாரம் என்கின்றனர்.

உன்னில் விழும்
வார்த்தைகளில்
விதவிதமான ஆயுதங்கள்.

உன் பேச்சின் முடிச்சுக்களில்
பரிதாபமாய் இறுகித்
துடிக்கும் பலரின்
இளங் கழுத்துக்கள்

ஒண்ணும் வேண்டாம்
எனக்கு...
ஒண்ணுமில்லாத
வெறும் இதயம்
ஒன்று போதும்
என் மனசாட்சியை
வைப்பதற்கு.

3 comments:

Anonymous said...

அருமை, நல்ல கவிதை. சூர்யா

அன்புடன் அருணா said...

/ஒண்ணும் வேண்டாம்
எனக்கு...
ஒண்ணுமில்லாத
வெறும் இதயம்
ஒன்று போதும்
என் மனசாட்சியை
வைப்பதற்கு./
இது ரொம்ப நல்லாருக்கு!

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றிகள் சூர்யனுக்கும் அன்பு அருணாவிற்கும்....