Monday, April 18, 2011

மெய்யும் பொய்யும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

மெய்யும் பொய்யும்
குமரி எஸ். நீலகண்டன்

பொய்யே
நெய்யாய் எரிய
உடலெங்கும்
பொய்யின் வியர்வையில்
புதைந்தவன் அவன்.

எப்போதும் பொய்யே
பேசும் அவன்
எப்போதாவது
உண்மை பேசுகையில்
பொய்யாய் போகும்
அவன் உருவமெனும்
மெய்.

11 comments:

ராமலக்ஷ்மி said...

பொய்யைப் பொசுக்கும் மெய்யான வரிகளாய்.. கவிதை.

மிக நன்று.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

Anonymous said...

நல்ல கவிதை!

ஸ்ரீராம். said...

நல்ல கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி சூர்யா

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றிகள் பல ஸ்ரீராம்

கே. பி. ஜனா... said...

நல்லாருக்கு, மெய்யாலுமே!

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றிகள் கே.பி.ஜனா அவர்களுக்கு

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான ஹைக்கூ....

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இணைப்பு வையுங்க மக்கா...

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி மக்களே... என்று நாஞ்சில் மொழியுடன் அன்பை உங்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன்