Thursday, April 14, 2011

பேப்பர்காரன் - திண்ணை இதழில் வெளியான கவிதை

பேப்பர்காரன்
குமரி எஸ். நீலகண்டன்

அழுத்தும் அரசியல்
அசிங்கங்கள் அத்தனையும்
அனாவசியமாய் பின்னால்
சுமந்து கொண்டு காலையில்
தெருத் தெருவாய்
சுறுசுறுப்பாய் சாலையின்
குறுக்கு நெடுக்காய்
வாகனங்களுக்கிடையே
மிதி வண்டியில் திரிகிற
பத்து பதினைந்து வயது
பையன்கள் எல்லோரும்
ஒரே சாயலில்
அண்ணன் தம்பிகள் போல்....

எரிகிற வயிற்றிற்காய்
எறிகிறார்கள் அவர்கள்
ஒவ்வொரு வீட்டு
வாசலிலும் பேப்பரை...
எல்லா அசிங்கங்களும்
எல்லோர் வீட்டு வாசலிலும்...
அந்த அசிங்கத்தை அள்ள
வாசலிலேயேக் காத்திருக்கும்
வீட்டுக்காரர்கள்

ஆனாலும் சுமைகளோடு
சுழலும் அவர்கள்
எல்லோர் முகத்தின்
மையத்தில்
ஒரு அசாதாரணப்
பேரொளி தெரிகிறது..
அவர்களில் யார்
நாளைக்கு ஜனாதிபதி...
ஆற்றல் மிகுந்த விஞ்ஞானி...
அகில உலகை ஆளுகிற
ஆன்ம குருவென்று மட்டும்
தெரியவே இல்லை. 

10 comments:

ராமலக்ஷ்மி said...

//எரிகிற வயிற்றிற்காய்
எறிகிறார்கள் அவர்கள்//

ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒவ்வொரு கதைகள்.

//ஒரு அசாதாரணப்
பேரொளி தெரிகிறது..
அவர்களில் யார்
நாளைக்கு ஜனாதிபதி...
ஆற்றல் மிகுந்த விஞ்ஞானி...
அகில உலகை ஆளுகிற
ஆன்ம குருவென்று மட்டும்
தெரியவே இல்லை. //

உண்மை. நல்ல கவிதை.

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி ராமலக்ஷ்மி....

கே. பி. ஜனா... said...

//எரிகிற வயிற்றிற்காய்
எறிகிறார்கள் அவர்கள்..//
செம வரி!

குமரி எஸ். நீலகண்டன் said...

உடனடியாகவே படித்துள்ளீர்கள்.. கே.பி.ஜனா சாருக்கு மிக்க நன்றி

ஸ்ரீராம். said...

அருமையான வரிகள். கடைசி வரிகள் அருமை.

குமரி எஸ். நீலகண்டன் said...

ஸ்ரீராம் உங்கள் அன்பிற்கும் வருகைக்கும் நன்றி

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா..அருமை! இப்படி ஒரு கவிஞனை இத்தனை நாள் எப்படி பார்க்காமல் விட்டேன்?

குமரி எஸ். நீலகண்டன் said...

"ஆரண்ய ஸ்ரீநிவாஸ்" ஆர். ராமமூர்த்தி அவர்களின் வருகையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பிற்கும் வருகைக்கும் நன்றி.

Anonymous said...

awesome!its truly nice

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி சூர்யா!