Monday, April 4, 2011

இருட்டிலிருந்து இருட்டு வரை - வடக்கு வாசல் இதழில் வெளியான கவிதை

இருட்டிலிருந்து இருட்டு வரை
குமரி எஸ். நீலகண்டன்

வெதுவெதுப்பான நீர் சூழ்ந்த
ஒளியே இல்லாத
இருண்ட உலகத்திலிருந்து
அழுது கொண்டே
வெளியே வந்தவன்
ஒளிகளின் வழி
ஊடுருவி
காலப் பயணத்தில்
முட்செடிகளில் உள் நுழைந்து
ரோஜாக்களையும்
மல்லிகைகளையும் நுகர்ந்து
தும்மி துடைத்து
முதுகில் முட்காயங்களுடன்
மழைகளிலும் மயானங்களிலும்
உருண்டு புரண்டு சகதியுடன்
சதைகளை ஆற்றிலும்
சாக்கடையிலும் அடித்து
துவைத்து வெயிலில்
உலர்த்தி உலவி
வெந்து  நைந்து
மீண்டும்
இருளில் புகுந்தான். 

8 comments:

Pranavam Ravikumar said...

கவிதை Super!

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி பிரணவம் ரவிகுமார்... உங்கள் அன்பிற்கும் வருகைக்கும் நன்றி

ஸ்ரீராம். said...

வாழ்க்கைப் பயணம்...
சவமான பின் என்ற வார்த்தை இல்லாமலேயே கூட பொருள் வருகிறது.

குமரி எஸ். நீலகண்டன் said...

ஸ்ரீராம்... மிக்க நன்றி.. நீங்கள் கூறியது போல் சவமான பின் என்ற வார்த்தை கூட தேவையில்லாதது போல்தான் எனக்கு இப்போது படுகிறது

ராமலக்ஷ்மி said...

வடக்கு வாசலில் வாசித்திருந்தேன். மிக அருமையான கவிதை.ஸ்ரீராமுக்கு நீங்கள் சொன்ன பதிலை ஆமோதிக்கிறேன். கவிதையின் கருவைப் போலவே படமும் உள் இழுக்கிறது. பொருத்தமான தேர்வு.

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி ராமலக்ஷ்மி. நண்பர்களின் கருத்துக்கள் இன்னும் எழுத்தை வளமுள்ளதாக்குகின்றன.

Anonymous said...

very nice

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி சூர்யா