Sunday, March 13, 2011

அதிரடித் தீர்ப்பு - வல்லமை இதழில் வெளியான கவிதை

அதிரடித் தீர்ப்பு
குமரி எஸ். நீலகண்டன்

விவாகரத்து கேட்டு
வந்தனர் இருவரும்..
ஒரே வழக்கறிஞரிடம்.
இயல்பினில் இருவரும்
இரண்டு திசைளென்றனர்.

நீ இந்தப் பக்கமாகவும்
நீ அந்த பக்கமாகவும்
சென்று விடுங்களென்றார்
கடுமையாய் வழக்கறிஞர்.

சிறிது வளைந்தும்
செல்லுங்கள் உங்கள்
பாதையில் என்றார்
கொஞ்சம் குழைவாக.

உங்கள் வளைவுகள்
ஒரு வட்டமானால்
வாருங்கள் இங்கே
விருந்து வைக்கிறேன்
என்றார் வழக்கறிஞர்.

5 comments:

ராமலக்ஷ்மி said...

//உங்கள் வளைவுகள்
ஒரு வட்டமானால்//

நல்ல வழக்கறிஞராக இருப்பதை விட நல்ல மனிதராக இருக்க விரும்புகிறார்.

நல்ல கவிதை. நன்றி

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி... உங்கள் கருத்துக்கள் கவிதைகளுக்கு புதிய சக்தியை அளிக்கின்றன

Anonymous said...

ம்ம்ம்ம்... நல்ல தீர்வு

வாழ்த்துக்கள் தோழரே!

ஸ்ரீராம். said...

அவர் வழக்கறிஞரா வாழ்க்கை அறிஞரா...

குமரி எஸ். நீலகண்டன் said...

she-nisi மற்றும் ஸ்ரீராம் - நன்றி. உங்கள் வருகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை அளிக்கிறது.