பிழையாகும் மழை
குமரி எஸ். நீலகண்டன்
இடி மின்னலென
வானத்தில் யானையின்
போர் பிளிறல்.
ஒலியும் ஒளியுமென
வெளியெங்கும்
வளரும் மழைக்கான
ஆயத்தங்கள்.
மண்ணிலிருந்து சீறிப்
பாயும் மழை வாசம்.
குடையும்
ரெயின் கோட்டுமாய்
பிளாஸ்டிக் பைகள்
பொதிந்த கோப்புகளுமாய்
மழைக்கு ஒளிந்து
பயணித்த சில தூரங்களில்
மேலிருந்து கெக்கெ
கெக்கேயென சிரிக்கும்
வெயிலின் எச்சிலொளியின்
எக்காளத்தில்
என்னால் எதுவும்
செய்ய இயலவில்லை
வெயிலையும் வெறுமனே
வேறெங்கோ சல்லாபிக்கும்
மழையையும்.
குமரி எஸ். நீலகண்டன்
இடி மின்னலென
வானத்தில் யானையின்
போர் பிளிறல்.
ஒலியும் ஒளியுமென
வெளியெங்கும்
வளரும் மழைக்கான
ஆயத்தங்கள்.
மண்ணிலிருந்து சீறிப்
பாயும் மழை வாசம்.
குடையும்
ரெயின் கோட்டுமாய்
பிளாஸ்டிக் பைகள்
பொதிந்த கோப்புகளுமாய்
மழைக்கு ஒளிந்து
பயணித்த சில தூரங்களில்
மேலிருந்து கெக்கெ
கெக்கேயென சிரிக்கும்
வெயிலின் எச்சிலொளியின்
எக்காளத்தில்
என்னால் எதுவும்
செய்ய இயலவில்லை
வெயிலையும் வெறுமனே
வேறெங்கோ சல்லாபிக்கும்
மழையையும்.
4 comments:
அருமை
.வெய்யிலையும் வெறுமனே
வேறெங்கோ சல்லாபிக்கும் மழையையும்...
மிகவும் ரசித்த அந்த வேளையை
மிகச் சரியாகச் சொல்லப்படாததை
மிகச் சரியாகச் சொன்னதற்காக
எனது மனங்கனிந்த பாராட்டுக்கள்
ரமணி அவர்களுக்கு மிக்க நன்றி
நல்ல கவிதை...வாழ்த்துக்கள்..
சமுத்ரா அவர்களுக்கு மிக்க நன்றிகள்
Post a Comment