மேசை துடைப்பவன்
குமரி எஸ். நீலகண்டன்
அந்த உணவு விடுதியில்
மேசை துடைக்கும்
அந்தச் சிறுவன்
அவன் முகம்
தெரியத் தெரிய
பளபளவென
அந்த மேசையைத்
துடைத்துக் கொண்டே
இருக்கிறான்.
இருப்பவரைப் பொறுத்து
மேசையில் அவன்
முகத்தின் மேல்
சிதறிய சட்னி... சாம்பார்...
தேநீர்.. காப்பி என
இத்யாதிகள்...
அவனும்
அவன் முகத்தில்
எந்தக் கறையுமின்றி
முகம் தெரியத் தெரியத்
துடைக்கிறான்.
ஒரு தடவை கூட
மேசைக்குள்
அவன் முகம்
அவனைப் பார்த்து
சிரிக்கவே மாட்டேன்
என்கிறது.
குமரி எஸ். நீலகண்டன்
அந்த உணவு விடுதியில்
மேசை துடைக்கும்
அந்தச் சிறுவன்
அவன் முகம்
தெரியத் தெரிய
பளபளவென
அந்த மேசையைத்
துடைத்துக் கொண்டே
இருக்கிறான்.
இருப்பவரைப் பொறுத்து
மேசையில் அவன்
முகத்தின் மேல்
சிதறிய சட்னி... சாம்பார்...
தேநீர்.. காப்பி என
இத்யாதிகள்...
அவனும்
அவன் முகத்தில்
எந்தக் கறையுமின்றி
முகம் தெரியத் தெரியத்
துடைக்கிறான்.
ஒரு தடவை கூட
மேசைக்குள்
அவன் முகம்
அவனைப் பார்த்து
சிரிக்கவே மாட்டேன்
என்கிறது.
10 comments:
சூப்பர்..
நன்றிகள் வசந்தா நடேசன் அவர்களே....
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்!
நன்றி ராமலக்ஷ்மி அவர்களுக்கு
Mr Athi Balasundaram commented,
Table cleaners life is always in unclean manner.
dharmanayagam
நன்றி தர்மநாயகம் அவர்களுக்கு... உண்மைதான் மேசை துடைப்பவர்களின் வாழ்க்கையை நினைப்பவர்கள் மிக குறைவு
அருமையா இருக்கு..வாழ்த்துகள்
உங்கள் கவிதையும் அதே கல்கியில்... அருமையாகவும் இருந்தது. மனதிற்கு சந்தோஷமாகவும்...
அருமையான கவிதை..
அமைதிச் சாரலின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment