Thursday, December 16, 2010

முகமூடிகள் - உயிரோசை இதழில் வெளியான கவிதை

முகமூடிகள்
குமரி எஸ். நீலகண்டன்

சாலையெங்கும்
சராசரி மனிதர்கள்
சஞ்சரிக்க
வியர்க்கிற வெயிலில்
ஈருருளி வாகனத்தில்
இறுக்கி அணைத்து
தோழனின் தோள் பற்றி
துப்பட்டாவில்
முகம் புதைத்து
மோகப் போதையில் அவள்.

அவளின் நெஞ்சைத்
திறந்த தோளாடை
அவளின் முகத்திற்கு
நல்ல பாதுகாப்பாம்
இரு வழிகளில்.....
சூரியக் கண்ணிலிருந்து
சுற்றும் கண்கள் வரை.

மூடிய துப்பட்டாவில்
கூடிய துளி உலகத்தில்
துள்ளி விளையாடியது
அவளது முகம்

3 comments:

முல்லை அமுதன் said...

nantry.
vaazhthukkal.
http://kaatruveli-ithazh.blogspot.com/

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி முல்லை அமுதன் அவர்களே..தாங்களும் ஒரு நல்ல இலக்கிய இதழ் நடத்துவது அறிந்து மகிழ்ச்சி

சுரேகா.. said...

ஆஹா..