Saturday, October 9, 2010

சீன சிறைவாசிக்கு அமைதிக்கான நோபல் பரிசு - செய்தியும் கவிதையும்

சீன சிறைவாசிக்கு அமைதிக்கான நோபல் பரிசு....
சீன அரசு எதிர்ப்பாளரும், ஆட்சியைக் கவிழ்க்க போராட்டத்தைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவருமான லியூ ஷியோபோ (54) 2010ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குமரி எஸ். நீலகண்டன்

அமைதி பொதிந்த
பரிசுக்குள்
அமுங்கி இருப்பவை
சிதறுவதற்காய் சிறுக
இறுக்கப் பட்டிருக்கும்
சீரிய ஆன்மாக்கள்.
சுழற்றி அடிப்பதற்காய்
சுருங்கப் பொதிந்த
சுனாமி அலைகள்.
அழுதழுது
ஆவியாகிப் போன
அற்புத உயிர்கள்.

2 comments:

dogra said...

உரிமைகளைக் கேட்பவர்களை அமுக்கி, "அமைதி"யாக்கி, ஒரு பொட்டலமாகக் கட்டி அமைக்கப்பட்ட பரிசா இது?

அருமையான கற்பனை.

குமரி எஸ். நீலகண்டன் said...

சிந்தனை அவர்களுக்கு நன்றி