Tuesday, October 5, 2010
செய்தியும் கவிதையும்- காவலர் தேர்வில் தில்லுமுல்லு
காவலர் உடல் திறன் தேர்வில் தேங்காய் சரட்டை வைத்து வாலிபர் "தில்லுமுல்லு'
சேலம் : சேலத்தில் நடந்த இரண்டாம் நிலை காவலருக்கான உடல் திறன் தேர்வில், உயரத்துக்காக தலையில் தேங்காய் சரட்டை வைத்து, "தில்லுமுல்லு' செய்த வாலிபர் மீது, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காவல் பணியில்
காதல் அவருக்கு ....
உடற் தகுதிக்கான
உயரம் போதவில்லை.
உயர்மட்ட ஆலோசனைக்குபின்
பொய்முடிக்குள்
கொப்பரை வைத்து
உயரம் கூட்டினான்.
மூளை வளர்ச்சி
போதவில்லையென்று
சிறையில் அடைத்தனர்
அவனை அதிகாரிகள்.
தலையில் தேங்காய்
வைத்தால் தென்னை
மரமாக இயலுமா...
குமரி எஸ். நீலகண்டன்
Labels:
செய்தியும் கவிதையும்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"தலையில் தேங்காய்
வைத்தால் தென்னை
மரமாக இயலுமா?"
நல்ல கேள்வி. தேங்காய் வச்சா முடி வளர்ந்து தேர்வுக்கு போகும்போது உயரம்-கூட்டும் முயற்சிகளை மறைக்க வாய்ப்பு அதிகமாகுமோ என்னமோ?
சிந்தனை அவர்களுக்கு மிக்க நன்றி
Post a Comment