நவீன விருட்சம்
22.9.10
கவிதையின் ஜனனம்
எழுத்து : குமரி எஸ். நீலகண்டன்
படிப்பவர்கள் இல்லையென்றே
எழுதுபவர்களின் கைகள்
எழுத மறுத்தும்
கவிதைகள் அவர்களை
வட்டமிட்டுக் கொண்டே
இருக்கின்றன.
காதில் வந்து வண்டு போல்
சதா ரீங்கரித்து
கொண்டே இருக்கின்றன
கவிதைகள்.
மூக்குகளை மூர்ச்சையாக்குகிற
அளவிற்கு ஊடுருவிப்
பாய்கின்றன
கவிதைகளின் வாசம்.
2 comments:
"மக்களின் உணர்வுகளை
பிரதிபலிக்கும் கவிதைகள்
விளையும் தளமாக
உன் இதயத்தைப் படைத்தேனே
எவ்வளவோ சிரமப்பட்டு.
தானாக விளையும் அக்கவிதைகளை
அறுவடை செய்து சேமிப்பதுகூட
நீ தேவையற்ற உழைப்பு
என்று நினைத்துவிட்டாயா?
வயலில் நெல்லை அறுவடை செய்பவன்
இதை யாராவது சாப்பிடுவார்களா
என்று கேட்பதில்லையே.
நெல்லை படைத்தவன் நான்
அதற்கு பசியையும்
உருவாக்கியிருக்கிறேனே!
ஏன் வீணாக்கினாய்
நான் கொடுத்திருந்த திறனை?"
என்று கடவுள் கேட்டால்,
என்ன் பதில் சொல்வீர்?
உண்மைதான் எல்லோரும் கடவுளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம். கருத்துக்களுக்கு நன்றிகள்.
Post a Comment