Tuesday, April 16, 2013

சாலை விதி - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை


சாலை விதி
குமரி எஸ். நீலகண்டன்


ஏழு வயதுக் குழந்தை
ஸ்கூட்டர் ஓட்டும்
பாவனையில்
பிர்பிர் என்று
ஒலி எழுப்பிக் கொண்டே
ஓடிக் கொண்டிருந்தது.

வலது கையைச்
சுழற்றிச் சுழற்றி
வாகனத்தின் வேகத்தை
வாயால் கூட்டிற்று
குழந்தை.

இடது கை மட்டும்
காதினில் குவிந்திருக்க
சாலையில்
வாகனச்சப்தம்
காதை அடைக்கிறதா
என்றேன்.

உடனே குழந்தை
தொல்லைக்
கொடுக்காதே நான்
செல்ஃபோனில் பேசிக்
கொண்டேச்
செல்கிறேன் என்றது.

2 comments:

கே. பி. ஜனா... said...

ஒரே வார்த்தையில் சொன்னால்: பிரமாதம்!

ராமலக்ஷ்மி said...

நிதர்சனம்.

சிந்திக்க வைக்கிறது கவிதை.