Tuesday, March 20, 2012

பனி நிலா - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

பனிநிலா
குமரி எஸ். நீலகண்டன்

பனிக்குஞ்சொன்று கண்டேன்.
சூரியன் சுட்ட
கருஞ்சாம்பலை விலக்கி
வெண்ணொளி வீசி
வீதிக்கு வந்தது.
குளிர்ந்து செழித்தது
காடும் நாடும்.
வெண்ணிலா
அதுவென்று சொன்னேன்.
வியந்து உயரப்
பார்த்தவர்
விழிகளுள்
பனிக் குஞ்சினை
புதைத்து வைத்தேன்.
நாளுக்கு நாள்
வளரும் குஞ்சோடு
விரியும் ஒளியில்
வெளிகளும் வளர்ந்தன..
விண்மீன்களும் குஞ்சுடன்
கொஞ்சி களித்தன.

4 comments:

ராமலக்ஷ்மி said...

வெண்பனி தூவும் நிலவை ரசித்துக் கொண்டாடும் கவிதை. அருமை.

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

Thirumalai somu said...

நல்ல கவிதைகளை படிக்கும் போது ஏற்படும் மன உணர்வுகளை ஒரு கவிஞன் மட்டுமே உணரமுடியும்.
என் மன உணர்வை பகிர வார்த்தை தேடுகிறேன். வாழ்த்துக்கள்