Tuesday, December 13, 2011

ஒரு உண்ணாவிரத மேடையில் - திண்ணை இதழில் வெளியான கவிதை

ஒரு உண்ணாவிரத மேடையில்
குமரி எஸ். நீலகண்டன்

மரண தண்டனையை
எதிர்த்தும் மனித
உரிமைகளுக்காகவும்
உண்ணாவிரதமிருந்தான்
அவன்.

எந்த உயிரைக்
கொல்வதற்கும்
மனிதனுக்கு உரிமை
இல்லையென்றே
முழங்கினான்.

அவனைக் கடித்துக்
கொண்டே இருந்த
கொசுக்களை
அடித்து அடித்து
இதையெல்லாம்
சொல்ல வேண்டி
இருக்கிறது அவனுக்கு.

12 comments:

Rathnavel Natarajan said...

அருமை.

குமரி எஸ். நீலகண்டன் said...

ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

உமா மோகன் said...

namathu unmaiyaana mugam@

ராமலக்ஷ்மி said...

மரண தண்டனை எதிர்ப்பில் மட்டுமின்றி, போராடுவதற்கு முரணாகவே பலரும் வாழ்க்கையில் இருப்பதை உணர்த்தும் நல்ல கவிதை.

ஸ்ரீராம். said...

ஜைனத் துறவிகள் நடக்கும் வழியில் காலில் மிதி பட்டு பூச்சிகள் கூட சாகக் கூடாது என்று மயில் தொகையால் தள்ளிக் கொண்டே நடப்பார்களாம். அது நினைவுக்கு வந்தது.

குமரி எஸ். நீலகண்டன் said...

ஆம் உண்மைதான். சக்தி மேடம்... மிக்க நன்றி...

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

குமரி எஸ். நீலகண்டன் said...

பிறர் துன்பத்தை தன் துன்பமாக நினைத்தால் உலகில் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்க முடியும்... மிக்க நன்றி ஸ்ரீராம்

SelvamJilla said...

you lines are simply super super super. i written some tamil kavithai in my blog.
please check and give ur comments
http://alanselvam.blogspot.com/

Anonymous said...

கவிதை மிகவும் அழகாக உள்ளது. சூர்யா

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி செல்வம் முனியாண்டி உங்கள் வருகைக்கும் அன்பிற்கும்...

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி சூர்யா...