Tuesday, November 15, 2011

நிலா அதிசயங்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை


நிலா அதிசயங்கள்
குமரி எஸ். நீலகண்டன்
அலை கடலில்
நீராடி வானமேறியது
வண்ண நிலா.

மங்கலப் பெண்ணாய்
மஞ்சள் முகத்தில்
ஆயிரமாயிரம்
வெள்ளிக் கரங்களால்
அழகழகான மலர்களை
அணு அணுவாய்
தொட்டு நுகர்ந்தது.

தாமரை மலர்களை
எல்லாம் தடவித்
தடவி தடாகங்களில்
மிதந்து களித்தது.

பழங்களையெல்லாம்
மரத்திலிருந்து
பறிக்காமல் சுவைத்தது.

நிலவின் சுமையில்
மலர்களில் இதழ்கள்
உதிரவில்லை.
மணங்களை மலர்கள்
இழக்கவில்லை.

நிலவு சுட்டப்
பழங்கள் நிறம்
மாறவில்லை.
கோடி கோடி
மைல்களென
அன்றாடம் அலையும்
நிலாவிற்கு அணுவளவும்
களைப்பில்லை.

14 comments:

உமா மோகன் said...

நிலவின் சுமையில்
மலர்களில் இதழ்கள்
உதிரவில்லை.
மணங்களை மலர்கள்
இழக்கவில்லை. nilave unnaippol uruththaatha gunam kodu

Anonymous said...

அழகான நிலா கவிதை... நிலா கவிதைகள் இன்னும் தொடருமா? நன்றி சூர்யா

ஸ்ரீராம். said...

நிலாவின் பயணமும் அனுபவங்களும் ஜோர்.

குமரி எஸ். நீலகண்டன் said...

சக்தி... உறுத்தாத உன்னதமான நிலாவைப் பற்றி அழகாகச் சொன்னீர்கள்... மிக்க நன்றி மேடம்...

குமரி எஸ். நீலகண்டன் said...

நன்றி சூர்யா

குமரி எஸ். நீலகண்டன் said...

மிக்க நன்றி ஸ்ரீராம்.... உங்கள் அன்பிற்கும் கருத்துக்களுக்கும்...

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை.

//பழங்களையெல்லாம்
மரத்திலிருந்து
பறிக்காமல் சுவைத்தது.


நிலவின் சுமையில்
மலர்களில் இதழ்கள்
உதிரவில்லை. //

ரசித்த வரிகள்.

நிலவின் அதிசயங்கள் தொடரட்டும்.

கே. பி. ஜனா... said...

கவிதையில் நிலவின் குளுமை!

குமரி எஸ். நீலகண்டன் said...

கே.பி.ஜனா அவர்களுக்கு மிக்க நன்றி

குமரி எஸ். நீலகண்டன் said...

ரத்னவேல் ஐயா அவர்களுக்கு நன்றி

குமரி எஸ். நீலகண்டன் said...

ராமலக்ஷ்மிக்கு நன்றிகள்

Dharmanayagam pillai S said...

நிலவு என்றுமே அழகு. வளரும் நிலவும் அழகு. பிறையும் அழகு. நிலவை மறைக்கும் தென்னை ஓலையும் அழகு. பாடாத கவியும் இல்லை. ரசிக்காத மனிதனும் இல்லை.தங்கள் கவிதையும் அழகு.
தர்மநாயகம்,நாகர்கோவில்.

குமரி எஸ். நீலகண்டன் said...

தர்மநாயகம் அவர்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றி