You are here:Home கவிதைகள் கவிதைகளின் காலம்
கவிதைகளின் காலம்
Posted by editor on September 11, 2010 in கவிதைகள் | 0 Comment
குமரி சு. நீலகண்டன்
Kumari_S_Neelakandan
”மா” பூ பூப்பதுபோல்
கவிதையின் காலங்களும்…
கவிதைகள் சில புளிக்கின்றன
இனிக்கின்றன
சில ஊறுகாயாய்
இலக்கியச் சோற்றுடன்
நாக்கை உரசிச் செல்கின்றன…
காலம் மாறி
பூத்த பூக்களும்
வண்டுகள்
வராத பூக்களும்
காற்றோடு
கரை கடந்த பூக்களும்
தரை விழுந்த பூக்களும்
வாடாத பூக்களுடன்
வாசம் பாடாத
பூக்களென
நிறைந்திருக்கிறது
இலக்கியத் தோட்டம்.
2 comments:
ஹ்ம்ம், பூக்களின் வேலை பூப்பது மட்டும் போலும். யாரும் பார்க்காத காட்டுப் பூவாக இருப்பதும் ... சமயங்களில் வரம் தான் :)
அனுஜன்யா
அனுஜன்யா அவர்களே
உங்களின் கருத்துக்களுக்கு நன்றி
Post a Comment