Monday, September 19, 2011

நிலாவின் அழைப்பு - வல்லமை இதழில் வெளியான கவிதை

நிலாவின் அழைப்பு
குமரி எஸ். நீலகண்டன்.

இருளைக் கிழித்து
அடைத்த சன்னலை
இடைவிடாது
தட்டிக் கொண்டே
இருக்கிறது நிலா..

திரைமூடிய
கண்ணாடியின்
சிறு இடைவெளிக்குள்
எட்டியும் பார்க்கிறது.

உறுமும் குளிர்சாதன
அறையில் உறங்கும்
அவர்களின் செவிகளுக்கு
நிலாவின் அழைப்பு
எட்டவே இல்லை.

அறையின் அகத்தில்
உறையும் குளிரில்
உறைந்து நிறைந்து
அறையின் சுவரில்
தன்னை வரைந்த
உறங்கும் குழந்தையை
உற்றுப் பார்த்து
கொண்டே இருக்கிறது
அழகான அந்த
நிலா ஓவியம்.

6 comments:

  1. இயற்க்கையை ரசிக்க தற்ப்போது மனிதர்களுக்கு நேரம் இல்லை...

    ReplyDelete
  2. மிக்க நன்றி சௌந்தர் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்...

    ReplyDelete
  3. //தன்னை வரைந்த
    உறங்கும் குழந்தையை
    உற்றுப் பார்த்து
    கொண்டே இருக்கிறது
    அழகான அந்த
    நிலா ஓவியம்.//

    ரசித்தேன்.

    இயற்கையின் அழகையும் ஆச்சரியங்களையும் உதாசீனம் செய்தபடிதான் சுழலுகிறது இயந்திர உலகம்.

    நல்ல கவிதை.

    ReplyDelete
  4. மிக்க நன்றி ராமலக்ஷ்மி...

    ReplyDelete
  5. இயற்கையை மறந்து செயற்கையில் வாழும் உலகம்.

    ReplyDelete