Monday, March 28, 2011

கடவுளும் சில சந்தேகங்களும் - வல்லமை இதழில் வெளியான கவிதை

கடவுளும் சில சந்தேகங்களும்
குமரி எஸ். நீலகண்டன்

கடவுள் என்று
ஒருவர் இருக்கிறாரா
என்று கேட்டேன்
நண்பனிடம். அவன்
இல்லவே இல்லை
என்றான் அழுத்தமாக...

அடுத்து நான்
தொடர்ந்தேன்
சில கேள்விகளோடு...

உலகில் எறும்புகளின்
வாயில் தேள்
கொடுக்கு இருந்தால்..

வானில் பறவைகளாக
முதலைகள் பறந்தால்..

கொசுக்கள் மூலமாக
எய்ட்ஸ் பரவும் என்றால்...

காற்றின் வழியாக
மின்சாரம் கடந்து
செல்லுமானால்...

பல்லிகளின் வாயில்
பாம்பின் விஷமிருந்தால்...

நாம் நினைப்பதெல்லாம்
மற்றவர்களின் காதில்
கேட்குமென்றால்...

நிலத்தினடியில்
நீருக்குப் பதில்
பெட்ரோலே இருந்தால்..

இப்படி நான்
கேள்விகளைத்
தொடரத் தொடர அவர்
விடுங்க சாமி...
கடவுள் இருக்கிறார்
இருக்கிறார் என்று
கூறிவிட்டு ஓடி விட்டார்.
எனது கேள்வி
அவரது பதிலினுள்
கடவுள் இருக்கிறாரா
என்பதுதான்.

7 comments:

  1. //அவரது பதிலினுள்
    கடவுள் இருக்கிறாரா
    என்பதுதான்.//

    தீரவில்லை போலுள்ளதே சந்தேகம்???

    நல்ல கவிதை.

    ReplyDelete
  2. முழு நம்பிக்கையோடு பார்க்கும் போதுதான் கடவுள் கடவுளாகத் தெரிவார். நன்றி ராமலக்ஷ்மி...

    ReplyDelete
  3. உண்மைதான். இப்போது தீர்ந்தது சந்தேகம். நன்றி:)!

    ReplyDelete
  4. அவரது பதிலில் கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இந்தப் பதிவில் கடவுள் இருக்கிறார்...!

    ReplyDelete
  5. ஸ்ரீ ராம்... என்னுடைய பதிவில் கடவுள் இருக்கிறார்... ஆனால் கடவுளை நாம் இன்னொருவர் மேல் திணிக்க இயலாது.. கூடாது... கடவுளென்பது அவரவரது நம்பிக்கையையும் அனுபவத்தையும் பொறுத்தது. நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  6. நல்ல கவிதை!

    ReplyDelete