மரம் பெய்யும் மழை - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை
மரம் பெய்யும் மழை
குமரி எஸ். நீலகண்டன்
மழை பெய்யத்
தொடங்கியதும்
மரம் பெய்யவில்லை
மழையை...
மழை நின்று
வெகு நேரமாகியும்
மரம் பெய்து
கொண்டே இருக்கிறது
மழையை பெரிய
பெரியத் துளிகளுடன்.
பூப்பெய்த மரங்கள்
பூ பெய்கின்றன
மழையோடு.
பூப்பெய்தாத மரங்கள்
இலைகளைப் போட்டு
விளையாடுகின்றன
போகும் நீரில்..
அருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.
அருமை.
ReplyDeleteரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteகவிதை நன்று:)
ReplyDeleteமரம் பெய்யும் மழையோடு வருகை தந்த மழைக்கும் நன்றி...
ReplyDelete