Tuesday, November 15, 2011

நிலா அதிசயங்கள் - திண்ணை இதழில் வெளியான கவிதை


நிலா அதிசயங்கள்
குமரி எஸ். நீலகண்டன்
அலை கடலில்
நீராடி வானமேறியது
வண்ண நிலா.

மங்கலப் பெண்ணாய்
மஞ்சள் முகத்தில்
ஆயிரமாயிரம்
வெள்ளிக் கரங்களால்
அழகழகான மலர்களை
அணு அணுவாய்
தொட்டு நுகர்ந்தது.

தாமரை மலர்களை
எல்லாம் தடவித்
தடவி தடாகங்களில்
மிதந்து களித்தது.

பழங்களையெல்லாம்
மரத்திலிருந்து
பறிக்காமல் சுவைத்தது.

நிலவின் சுமையில்
மலர்களில் இதழ்கள்
உதிரவில்லை.
மணங்களை மலர்கள்
இழக்கவில்லை.

நிலவு சுட்டப்
பழங்கள் நிறம்
மாறவில்லை.
கோடி கோடி
மைல்களென
அன்றாடம் அலையும்
நிலாவிற்கு அணுவளவும்
களைப்பில்லை.

14 comments:

  1. நிலவின் சுமையில்
    மலர்களில் இதழ்கள்
    உதிரவில்லை.
    மணங்களை மலர்கள்
    இழக்கவில்லை. nilave unnaippol uruththaatha gunam kodu

    ReplyDelete
  2. அழகான நிலா கவிதை... நிலா கவிதைகள் இன்னும் தொடருமா? நன்றி சூர்யா

    ReplyDelete
  3. நிலாவின் பயணமும் அனுபவங்களும் ஜோர்.

    ReplyDelete
  4. சக்தி... உறுத்தாத உன்னதமான நிலாவைப் பற்றி அழகாகச் சொன்னீர்கள்... மிக்க நன்றி மேடம்...

    ReplyDelete
  5. மிக்க நன்றி ஸ்ரீராம்.... உங்கள் அன்பிற்கும் கருத்துக்களுக்கும்...

    ReplyDelete
  6. நல்ல கவிதை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அழகான கவிதை.

    //பழங்களையெல்லாம்
    மரத்திலிருந்து
    பறிக்காமல் சுவைத்தது.


    நிலவின் சுமையில்
    மலர்களில் இதழ்கள்
    உதிரவில்லை. //

    ரசித்த வரிகள்.

    நிலவின் அதிசயங்கள் தொடரட்டும்.

    ReplyDelete
  8. கவிதையில் நிலவின் குளுமை!

    ReplyDelete
  9. கே.பி.ஜனா அவர்களுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  10. ரத்னவேல் ஐயா அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  11. ராமலக்ஷ்மிக்கு நன்றிகள்

    ReplyDelete
  12. நிலவு என்றுமே அழகு. வளரும் நிலவும் அழகு. பிறையும் அழகு. நிலவை மறைக்கும் தென்னை ஓலையும் அழகு. பாடாத கவியும் இல்லை. ரசிக்காத மனிதனும் இல்லை.தங்கள் கவிதையும் அழகு.
    தர்மநாயகம்,நாகர்கோவில்.

    ReplyDelete
  13. தர்மநாயகம் அவர்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்கநன்றி

    ReplyDelete