Friday, September 9, 2011

நிலவும் தவளையும் - நவீன விருட்சத்தில் வெளியான கவிதை

நிலவும் தவளையும்
குமரி எஸ். நீலகண்டன்.

அலையற்ற நீர்
படுக்கையில் அயர்ந்த
தூக்கத்தில் நிலா.

நிலவிற்கு இரங்கி
நீரைத் தொடாமல்
விலகிச் செல்கிறது
காற்று.

இரவின் அமைதியில்
எங்கிருந்தோ வந்து
விழுந்த தவளையின்
துள்ளலில் வளைந்து
நெளிந்தது நிலா
.

8 comments:

  1. /நிலவிற்கு இரங்கி
    நீரைத் தொடாமல்
    விலகிச் செல்கிறது
    காற்று./

    அருமை.

    அழகான கவிதை.

    ReplyDelete
  2. ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  3. nilaavin thuyilai naame kalaiththathu pol .... kurukuruppu 2

    ReplyDelete
  4. சக்தி மேடம்... உங்கள் வருகையில் மிக்க மகிழ்ச்சி...நன்றி..

    ReplyDelete
  5. Neelcantan your writing has improved a lot. Raju

    ReplyDelete