Monday, April 25, 2011

பரிவின் குருவாய் பாயும் ஒளி - 2011 ஏப்ரல் 24 அன்று காலை 0740 மணி அளவில் முக்தி அடைந்தார் ஸ்ரீ சத்ய சாய் பாபா

பரிவின் குருவாய் பாயும் ஒளி
குமரி எஸ். நீலகண்டன்

அண்ட வெளியின் ஒளியின்
ஒவ்வொரு துளியிலும்
உன் கருணை விழிகள்.

உயிர் துளிகளைத் துளிர்க்கும்
காற்றின் கீற்றுகள்
பேசும் உன்
அன்பின் மொழி...

மதமற்ற மனிதத்தின்
மகோன்னத ஒளியுடன்
உலகிற்கு ஒளியூட்டும்
உலகாளும் சூரியன் நீ. 

தகிக்கும் வாழ்வில்
தாகம் தீர்ப்பவனாய்
வெள்ளமாய் பாய்கிற
விரிந்த கடல் நீ.

உடல் விட்ட
உன் ஆன்மாவை இனி
உலகின் ஒளியிலும்
ஏழையின் விழியிலும்
அகலாத அன்பிலும்
அன்றாடம் காண்போம்.

சேவையால் அன்பை
சேமித்த கடலே|
அகிலமே உன் அன்பால்
அடையட்டும் அமைதியே...
சாய் ராம்.....

4 comments:

  1. அன்பின் அருளின் தெய்வத்திற்கு இதயம் கனிந்த அஞ்சலி.

    ReplyDelete
  2. மறைந்தும் மறையாத நல்ல இதயத்துக்கு கவிதாஞ்சலி.

    ReplyDelete
  3. மறைந்தும் மறையாத நல்ல இதயத்துக்கு கவிதாஞ்சலி

    ReplyDelete
  4. மிக்க நன்றி சுரேஷ்
    ஸ்ரீராம்
    செந்தில்
    என்னோடு உங்கள் அன்பை பகிரிந்தமைக்கு...

    ReplyDelete